கிரவுட்சோர்சிங்-ஓர் அறிமுகம் Crowdsourcing-An introduction

வணக்கம் நான் உங்கள் அஷோக். இந்த கட்டுரையில் நான் ஒரு உண்மையான ஆன்லைன் வேலை பற்றி பகிர போகின்றேன். சென்ற கட்டுரையில் நான் கொடுத்த ஆன்லைன் வேலை மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றால் இந்த லிங்கில் சென்று படிக்கவும்.
https://maxicashonline.blogspot.com/2021/08/blog-post.html?m=1


இது எதுவும் பணம் பறிக்கும் முயற்சியோ உங்களை விற்பனையாளராக மாற்று முயற்சியோ கிடையாது மிகவும் உண்மையான ஒரு ஆன்லைன் வேலை பற்றியது. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள். 

சர்வதேச அளவில் இன்று கணினி தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றன என்பது நம்மில் பலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த கணினி தொழில்நுட்பத்திலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) என்பதாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகளை மனிதர்களைப் போல சிந்திக்க செய்வதற்கு தயார் படுத்தும் ஒரு உயர்நிலை தொழில் நுட்பமாகும். மனிதர்கள் எவ்வாறு சிறுவயதிலிருந்து பல்வேறு காட்சிகள் மூலமும் அறிவுரைகள் மூலமும் பாடங்கள் மூலமும் நம் மூளையில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி ஆறறிவு பெற்ற மனிதனாக படிப்படியாக வளர்ச்சி பெறுகிறோமோ அதேபோல் கணினியை உருவாக்குவதாகும். அடிப்படையில் மனிதனைப் போன்ற சிந்திக்கும் ஆறாவது அறிவை(sense of thinking) கணினிகளுக்கு உருவாக்குவதாகும். 

மனிதர்களுக்கு மூளையில் உள்ள நியூரான்களின் வலைப்பின்னலின்(neural networks) மூலம் சிந்தனை அறிவு செயல்பாடு ஆகியவை நடைபெறுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின்(evolution) ஒரு உயர்நிலை வெளிப்பாடு ஆகும். ஆனால் ஒரு கணினிக்கு தொடர்ச்சியான பல்வேறு உத்தரவுகளை இடுவதன் மூலம் அதற்கு ஒரு சிந்திக்கும் அல்லது ஒரு முடிவு எடுக்கும் ஒரு திறனை உருவாக்க மனிதனால் முடியும். இச் செயல்பாட்டினால் மனிதனைவிட கணினியால் மிக வேகமாக மனிதனை மிஞ்சிய அறிவாற்றலுடன் சிந்திக்கும் திறனுடன் செயல்பட முடியும். ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது அது என்னவென்றால் மனிதன் தனது அறிவைப் பெருக்க பல்வேறு அனுபவங்களை பெறுகிறான் சிறுவயதிலிருந்தே பல்வேறு காட்சிகள் பல்வேறு சிக்கல்கள் பல்வேறு கணக்குகள்(logical and analytical processing skills) போன்றவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து செய்து பழகி அறிவை வளர்த்துக் கொள்கிறான். இதுபோன்ற உயிரியல் ரீதியான அனுபவ சேகரிப்பை கணினியால் பெற இயலாது.

அதற்கு மனித முயற்சி(human effort) வேண்டும். மனிதர்களால் சரியான முறையில் கட்டளைகள்(programmed commends) வைக்கப்பட்டால் மட்டுமே கணினியால் மனிதர்களின் நிலையிலிருந்து எது சரி? எது தவறு? எது சரியானது? எது லாபமானது? எது ஆபத்தானது? எது எதிர் கொள்ளக் கூடியது? என்பது போன்ற முடிவுகளை எடுக்க முடியும். இதற்கு முக்கியமாக தேவைப்படுவது அதிகப்படியான (data) அல்லது தரவு புள்ளிகள்(data points). இங்கே நான் அதிகம் என்று கூறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட(Big Data) மிக அதிக அளவுகளில் தொகுப்பாகும். மனிதனைப் போல் அல்லது மனிதனை மிஞ்சிய ஒரு சிந்திக்கும் இயந்திரத்தை படைக்க முயற்சிக்கும் பொழுது அதற்கு மனிதனைப் போலவே அவன் சந்திக்கும் அனைத்து அனுபவ சிந்தனை தரவுகளையும்(scene of experiences) சேகரித்து அளிக்க வேண்டும். 
இதுபோன்ற அசாத்திய வேலையை தற்போதுள்ள கணினிகளால் செய்ய முடியாது. மனிதனின் அனுபவங்களை மனிதனால் மட்டுமே பகிர்ந்து கொள்ளவும் கற்பிக்கவோ செயல்படுத்தவும் முடியும். கணினிக்கு இதுபோன்ற தகவல்களை கற்பித்து கணினியை கற்றுக் கொள்ள வைக்கும் முறைக்குப் பெயர் மெஷின் லேர்னிங்(Machine learning) என்பதாகும்.

மெஷின் லேர்னிங்(Machine Learning) என்ற வார்த்தையில் மூலமே நாம் அதன் பொருளை உணர்ந்து கொள்ளலாம். அதாவது இயந்திரத்திற்கு கற்பிப்பதாகும். எதைக் கற்பிப்பது? மனிதன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எந்த எந்தக் குறியீடுகளை, சமிக்கைகளை வைத்து முடிவெடுக்கிறான் சிந்திக்கிறான் என்பதைப் பற்றி ஆகும்.

ஒரு மனிதனின் அனுபவங்களை முழுவதும் கற்றுக் கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க ஒரு முழு மனித ஆயுளே தேவைப்படும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் இல்லை பல்வேறு வகையான மக்கள் தொகுப்பில்(diverse population groups) இருந்து பல லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்தால் அது முடியும். கணினியால் அவ்வளவு தகவல்களை பரிசீலிக்க முடியுமா? என்று என்ன வேண்டாம் மனிதர்களால் அவ்வளவு அரிய தகவல்களை சரியான முறையில் கொடுக்க முடியுமா என்பதே கேள்வி.
 பல்வேறு செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் கூடிய விரைவில் குவாண்டம்(Quantum computers) கணினிகளிலேயே செயல்படப் போகிறது. குவாண்டம் கணினிகளின் செயல்திறன் மிகவும் அதிகம் அதை மிகச் சரியாக சிந்திக்க வைக்க செயல்பட வைக்க மிக அதிக தரவுகள் தேவை. அந்தத் தரவுகளை தான் மெஷின் லேர்னிங் முறையில் சேகரிக்க வேண்டும். 

இந்த மெஷின் லேர்னிங் முறையில் தகவல்களை பல்வேறுபட்ட மக்களிடமிருந்து திரட்டுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் செயல்பட்டு வருகிறது. இந்த தகவல்களை திரட்டுவதற்காக மிக அதிக நபர்கள் தேவைப்படுவதால் அத்தனை நபர்களையும் ஒரு நிறுவனம் தங்களுக்கு கீழ் நிரந்தர பணியாளர்களாக(permanent payroll) நியமிக்க முடியாது. ஏனென்றால் சில நேரங்களில் பல லட்சம் நபர்கள் தேவைப்படலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் உபயோகிக்கும் முறை கிரவுட்சோர்சிங்(crowdsourcing) எனப்படுவதாகும்.

கிரவுட்சோர்சிங் என்றால் எந்த நிறுவனத்திலும் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் ஆன்லைனிலேயே எங்கு வேலை இருக்கிறதோ எது நமக்கு பிடித்திருக்கிறதோ எதற்கு நாம் தகுதி பெறுகிறோமோ அந்த வேலையை நாமே தேர்ந்தெடுத்து செய்வதாகும். இந்த முறையில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன அதாவது விரும்பிய இடத்தில் வேலை, ஒரு உயர் தொழில் நுட்பத்திற்கு நம்முடைய பங்கு, எளிதான வேலை, நியாயமான பணப்பயன் என இன்னும் பல இருக்கின்றன. 

இந்த கிரவுட்சோர்சிங் முறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கானது மட்டுமல்ல பல்வேறு வகையான தொழில்களில் எங்கு எல்லாம் மிக அதிக அளவில் நபர்கள் தேவைப்படுகிறார்களோ அங்கெல்லாம் இந்த முறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தளத்தில் அடுத்தடுத்து கட்டுரைகளில் இந்த கிரவுட்சோர்சிங் தளங்கள், அவற்றில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், எவ்வளவு சம்பாதிக்கலாம் வேலையின் தன்மை மற்றும் வேலைக்கு தகுதி பெறுவது எப்படி போன்றவற்றை எழுத இருக்கிறேன்.

மாறிவரும் காலகட்டங்களில் அதுவும் இந்த கொரானா காலகட்டத்தில் அரசு வேலையைத் தவிர எந்த வேலையும் நிரந்தரமில்லை என்பதை அனைத்து இளைஞர்களும் உணர்ந்திருப்பீர்கள். உங்களது நிதி சுதந்திரத்திற்கும் நிதி ஆதாரங்களுக்கும் இந்த வகையான ஆன்லைன் வேலைகள் மிகவும் உறுதுணையாக இருக்கும். இதற்கு நீங்கள் மிக அதிக நேரமோ ஒரு ரூபாய் பணமோ கூட செலவிட வேண்டியதில்லை. ஆகையால் மேலும் இதுபோன்ற தகவல்களை பெற இந்த வலைதளத்தை உங்களது பிரவுசரில் புக்மார்க்(bookmark) செய்து கொள்ளவும்
https://maxicashonline.blogspot.com/?m=1

இந்த பற்றிய உங்களது கருத்துக்களை கமெண்ட்களாக பதிவுசெய்யவும் 

என்னை தொடர்புகொள்ள இடது பக்கத்திலுள்ள காண்டாக்ட் ஃபாரமை(contact form) பயன்படுத்தவும் அல்லது இந்த டெலிகிராம் குரூப்புகள் எதிலாவது கமெண்ட் செய்தும் தொடர்பு கொள்ளலாம்.

https://t.me/maxicashonline
https://t.me/maxicashdiscussion

https://t.me/tamilmemesviral
https://t.me/tamilmemesviraldiscussion


Comments

Popular posts from this blog

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாமா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது உண்மையா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சட்டப்பூர்வமானதா?