கிரவுட்சோர்சிங்-ஓர் அறிமுகம் Crowdsourcing-An introduction
வணக்கம் நான் உங்கள் அஷோக். இந்த கட்டுரையில் நான் ஒரு உண்மையான ஆன்லைன் வேலை பற்றி பகிர போகின்றேன். சென்ற கட்டுரையில் நான் கொடுத்த ஆன்லைன் வேலை மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றால் இந்த லிங்கில் சென்று படிக்கவும். https://maxicashonline.blogspot.com/2021/08/blog-post.html?m=1 இது எதுவும் பணம் பறிக்கும் முயற்சியோ உங்களை விற்பனையாளராக மாற்று முயற்சியோ கிடையாது மிகவும் உண்மையான ஒரு ஆன்லைன் வேலை பற்றியது. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள். சர்வதேச அளவில் இன்று கணினி தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றன என்பது நம்மில் பலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த கணினி தொழில்நுட்பத்திலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) என்பதாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகளை மனிதர்களைப் போல சிந்திக்க செய்வதற்கு தயார் படுத்தும் ஒரு உயர்நிலை தொழில் நுட்பமாகும். மனிதர்கள் எவ்வாறு சிறுவயதிலிருந்து பல்வேறு காட்சிகள் மூலமும் அறிவுரைகள் மூலமும் பாடங