ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாமா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது உண்மையா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சட்டப்பூர்வமானதா?

 எனது பெயர் அசோக் இந்த தளத்தில் நான் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?,  ஆன்லைன் வேலையில் உள்ள மோசடி மற்றும் சிக்கல்கள் பற்றி எழுதப்போகிறேன்


ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாமா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது உண்மையா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சட்டப்பூர்வமானதா?


இந்த கோரானா காலகட்டம் மொத்த உலகின்  நிறுவனங்களின் செயல்படும் முறையையும் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டன. முக்கியமாக சேவை சார்ந்த துறைகளை அடியோடு மாற்றிவிட்டது. ஒரு நிறுவனம் அல்லது அலுவலகம் என்றால் காலை 9 முதல் மாலை 5 வரை நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும் தன்மை மாறிவிட்டது. இந்த கோரானா காலகட்டம் முடிந்த அளவு எந்தெந்த வேலையை எல்லாம் வீட்டிலிருந்து செய்யமுடியுமோ அந்த வேலையை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்க சர்வதேச பெரும் நிறுவனங்களே முன் வந்து விட்டனர். 


அதற்கு முக்கிய காரணங்கள்


எங்கிருந்தாலும் வேலை செய்வதற்கு அனுமதிக்கும் தொழில்நுட்பம்

தொழிலாளர்களை நிறுவனங்களுக்கு வரவழைத்து வசதி செய்து கொடுக்கும் செலவு குறைவு

வீட்டில் இருந்து வேலை செய்ய அதிகம் பேர் விரும்புவது

செயல் திறன் அதிகரிப்பு

நிகழ்கால நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு



ஐடி துறைகளில் சேவை (service based) சார்ந்த துறைகள் மட்டுமல்லாமல் பொருள் (product based) சார்ந்த துறைகளும் கூட இந்த வீட்டில் இருந்தே வேலை என்ற கலாச்சாரத்தை அனுமதித்து விட்டன.


இந்த சூழ்நிலையில் ஏற்கனவே ஆன்லைனில் freelancing செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு கடும் போட்டியாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர்மாறாக பல்வேறு வாய்ப்புகளை இது வழங்கிக் கொண்டிருக்கிறது. கணினி சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறு பணிகளை Crowdsourcing முறையில் செய்து  முன்வந்திருக்கிறார்கள். இந்த முறையில் எந்த நிறுவனத்திலும் நிரந்தர பணியாளர்களாக இல்லாமல் வேலை இருக்கும்போது வேலை செய்து பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்த நிறுவனத்திற்கு சென்று அந்த வேலையை செய்துகொண்டே இருக்கலாம் இந்த முறை நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. இது ஏனைய வெளிநாட்டில் கோரானா காலம் ஆரம்பித்த 2019 முதல் நன்றாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தான் இந்த வகையான முறையான தொழில் ரீதியான ஆன்லைன் வேலை வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது.


இங்கே நான் ஆன்லைன் வேலை என்று கூறுவது காலம்காலமாக மோசடி கும்பலால் பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகளான data entry, form filling, captcha , handwriting etc. போன்றவைகள் அல்ல. இது மாதிரியான வேலைகள் எந்தக்காலத்திலும் உண்மையாக இருந்தது இல்லை இது முழுவதும் 100% மோசடி வேலைகள் இதில் பணம் முதலீடு இல்லாமல் வேலை செய்தாலும் சரி பணம் செலுத்தி வேலை செய்தாலும் சரி உங்களுக்கு எந்த ஒரு வருமானமும் வரப்போவது இல்லை.


ஒரு ஆன்லைன் பணம் சம்பாதிக்கும் முறை இருக்கிறது என்று ஒருவர் உங்களிடம் கூறினால் முதலில் நீங்கள் கேட்க வேண்டியது உங்கள் பிஸினஸ் மாடல் என்ன என்று? நமக்கு அவர் வருமானம் தருகிறார் என்றால் நாம் செய்யும் வேலையை வைத்து அவர் எவ்வாறு பணம் வாங்குகிறார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அது எந்த அளவிற்கு உண்மையாக லாபமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் உங்களுக்கு வருமானம் ஒழுங்காக வருமா வராதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வேலை செய்யும் பொருள் எவ்வாறு விற்கப்பட்டு நிறுவனத்திற்கு பணம் வருகிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அப்போதுதான் உங்களது வருமானத்தில் உறுதி தன்மையை நீங்கள் நம்பலாம்.


மேலே மோசடி வகை வேலைகளான data entry form filling captcha typing handwriting etc அனைத்திற்கும் மனிதனால் தான் செய்யப்பட வேண்டும் என்ற அவசியம் தற்போதைய தொழில்நுட்ப உலகில் இல்லவே இல்லை ஒரு சாதாரண Java program அல்லது Character recognition  சாப்ட்வேர்கள் மூலமாக தானியங்கி முறையிலேயே செய்துவிடலாம் மனிதத் தலையீடு எந்த சூழ்நிலையிலும் தேவைப்படாது. இம்மாதிரி வேலைகளை உங்களுக்கு கொடுத்து செய்யச் சொல்கிறார்கள் என்றால் அதற்கு அந்த சாப்ட்வேரின் வாங்கும் விலையை விட மிகக் குறைந்த ஊதியம் தான் தருவார்கள் ஆனால் அதற்கு விளம்பரமோ மாதம் முப்பதாயிரம் நாற்பதாயிரம் என்பது போல் விளம்பரம் அளிப்பார்கள். வேலை தேடும் இளைஞர்கள் வேலை இழந்த இளைஞர்கள் இதைப் போன்ற மோசடிகளை என்றுமே நம்பக்கூடாது. ஒன்று அந்த நிறுவனமே பணமோசடி செய்ய நிறுவப்பட்ட போலி நிறுவனமாக இருக்கும் அல்லது வேலை வாங்கிவிட்டு சில நூறு ரூபாய்களை மட்டும் கொடுக்கும் நிறுவனங்களாக இருக்கும். இதை நான் எழுதுவது எனக்கு மற்றும் எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை வைத்துதான்.


மீண்டும் அதையே தான் கூறுகிறேன் நமக்கு வருமானம் வருகிறது என்றால் நம்முடைய நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் வருகிறது எந்த முறையில் வருகிறது என்று நாம் ஒரு முறை யோசிக்க வேண்டும் அதை யோசிக்க தொடங்கிவிட்டால் இந்த மோசடி நண்பர்களிடமும் நீங்கள் ஏமாற வேண்டிய அவசியம் இருக்காது.


அப்போது முதலில் நீங்கள் கூறிய ஆன்லைன் வேலை என்பது என்ன்? அதில் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 


அதுபோன்ற ஐடி மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் தொழில் ரீதியாக வேலை செய்பவர்கள் அனைவரும் அது சார்ந்த தொழில் படிப்புகளைப் படித்து இருப்பார்கள் அவர்கள் நிறுவனத்திற்க்கு வந்து வேலை செய்ய தற்போது வாய்ப்பு இல்லாததால் அவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அது போன்ற வேலைகளை பெற குறிப்பிட்ட பட்டப்படிப்பை நீங்கள்  பெற்றிருக்க வேண்டும்.


குறிப்பிட்ட வகை படிப்பைப் பெறாமலேயே கணினி சார்ந்த துறைகளில் வேலை செய்யலாம் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை வைத்தே வருமானம் ஈட்டுவது எப்படி என்பது பற்றி அடுத்தடுத்த போஸ்ட்களில் எழுதயிருக்கிறேன்.


நீங்கள் தொடர்ந்து ஆன்லைன் வேலைகளை பற்றிய உண்மையான நேர்மையான தகவல்களை தர இந்த வலைதளத்தை உங்கள் பிரவுசரில் புக்மார்க் செய்து கொள்ளவும்.


இது பற்றிய கருத்துக்களை உங்கள் அனுபவங்களை கமெண்டில் பதிவிடவும்.


Comments

Popular posts from this blog

கிரவுட்சோர்சிங்-ஓர் அறிமுகம் Crowdsourcing-An introduction